அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த பெண் - நொடி பொழுதில் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டம் மாளா அருகே பாரப்புரம் பகுதியை சேர்ந்தவர்கள் சிஜோ-நீது தம்பதியினர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் கடந்த 8-ந் தேதி சாலக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். 

அதன் பின்னர் தாய், சேய் இருவரும் நலமாக இருந்ததால், இருவரையும் உறவினர்கள் வீட்டிற்கு அழைத்து வந்தனர். இந்த நிலையில் நீது நேற்று முன்தினம், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்காக சாலக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

ஆனால், நீத்துவுக்கு சில மணி நேரம் நினைவு திரும்பாமல் இருந்தது. இதைத்தொடர்ந்து, உறவினர்கள் நீதுவை திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே நீது இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதையறிந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மருத்துவரின் தவறான சிகிச்சையால் நீது இறந்து விட்டதாகவும், அறுவை சிகிச்சைக்காக தரப்பட்ட மயக்க மருந்தின் அளவில் ஏற்பட்ட தவறு காரணமாக இறந்து இருக்கலாம் என்று சந்தேகமுள்ளதாக கூறி போலீசில் புகார் அளித்தனர்.

அந்தப் புகாரின் படி போலீசார் நீதுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து நீதுவின் அறுவை சிகிச்சை ஆவணங்களை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman died in kerala for wrong treatment


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->