மத்திய பிரதேசம் : மருத்துவர்கள் இருந்தும் வளாகத்திலேயே குழந்தை பெற்ற பெண் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசம் : மருத்துவர்கள் இருந்தும் வளாகத்திலேயே குழந்தை பெற்ற பெண் - நடந்தது என்ன?

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் மாவட்டம் ஷிவ்புரி என்ற கிராமத்தை சேர்ந்தவர் அருண்பரிஹார் மனைவி வாலாபாய். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்த அருண்பரிஹார் மருத்துவ உதவிக்காக ஆம்புலன்ஸை அழைத்துள்ளார்.

நீண்ட நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால் அருண்பரிஹார் தனது மனைவியை வேறு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அப்பகுதியில் இருந்த மாவட்ட சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அங்கு போதிய ஊழியர்களும், மருத்துவமனைக்குள் அழைத்துச் செல்ல ஸ்ட்ரக்சர் மற்றும் வார்டு ஊழியர்களும்  இல்லை. 

இதனால், அந்த பெண் மருத்துவமனை வளாகத்திலேயே பெண் குழந்தை பெற்றுள்ளார். அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். அதன் பின்னர் மருத்துவமனை ஊழியர்கள் ஒரு ஸ்ட்ரக்சரை கொண்டு வந்து வாலாபாய் மற்றும் பிறந்த குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். 

இது தொடர்பாக அருண் தெரிவித்ததாவது:- "மருத்துவமனையின் ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அங்கே சுற்றி இருந்தனர். ஆனால் யாரும் உதவிக்கு வரவில்லை" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman birth baby in hospital complax in madhya pradesh


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->