Investment Friendliness Index 2026; நிதி ஆயோக்கின் முதலீட்டாளர்களுக்கு உகந்த மாநிலங்களில் தமிழ்நாட்டிற்கு எந்த இடம்..? - Seithipunal
Seithipunal


நிதி ஆயோக் அமைப்பு 2026 ஆம் ஆண்டிற்கான முதலீட்டாளர்களுக்கு உகந்த மாநிலங்கள் குறியீட்டை (Investment Friendliness Index 2026) முதன்முறையாக வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் முதலீடுகளை ஈர்ப்பதில் மிகச் சிறந்த சூழலைக் கொண்டுள்ள மாநிலங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 17 முக்கிய பெரிய மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த விரிவான ஆய்வில், குஜராத் மாநிலம் 56.6 புள்ளிகளைப் பெற்று நாட்டில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அடுத்ததாக, இந்தத் தரவரிசைப் பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலம் 53.7 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், தமிழ்நாடு 53.3 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.

குஜராத் மாநிலத்தின் தொழில்துறை விரிவாக்கப் பணியகம் (iNDEXTb) வழங்கும் Single-Window System அங்கு புதிய தொழில்களைத் தொடங்குவதை மிக எளிமையாகவும் வெளிப்படையானதாகவும் மாற்றியுள்ளது.

ஒரு குறிப்பிட்ட கால வரம்பிற்குள் சட்டப்பூர்வ அனுமதிகள் மற்றும் தடையின்மைச் சான்றிதழ்கள் (NOC) வழங்கப்படுவதால் திட்டங்கள் வேகமாக செயல்படுத்தப்படுகின்றன. அத்துடன், வணிகங்களுக்கு ஒரு நிலையான மற்றும் கணிக்கக்கூடிய செயல்பாட்டுச் சூழலை வழங்கியுள்ளதாக இந்த நிதி ஆயோக் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.  மேலும், தொழில்துறை வளர்ச்சிக்கு குஜராத்தின் மின்சாரத் துறை மிகப்பெரிய பலமாக உள்ளது என்றும் Investment Friendliness Index 2026 கூறுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Where does Tamil Nadu rank among NITI Aayogs investor friendly states


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->