வாட்ஸாப் குழு அட்மின்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! நிம்மதி பெருமூச்சுவிடும் அட்மின்கள்.!  - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த கிஷோர் தருண் என்ற 33 வயது நபர் வாட்ஸ் அப் குழு ஒன்றை நிர்வகித்து வந்துள்ளார். அந்த குழுவில் பெண்களுக்கு எதிராக பாலியல் ரீதியாகவும், இன ரீதியாகவும் சில கருத்துக்கள் பதிவிட படுவதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த புகாரின் பேரில் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவது பெண்களை இழிவுபடுத்துவது ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து, அட்மின் கிஷோர் மும்பை உயர்நீதிமன்ற நாகபுரி கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். 

காவல்துறை சார்பில், "வாட்ஸ்அப் குழுவில் பெண்களுக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வந்த நபர்களை கிஷோர் குழுவை விட்டு நீக்கவில்லை." என்று குற்றம் சுமத்தப்பட்டது. 

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் வாட்ஸ்அப் குழுவை நிர்வகிப்பவர், "தனிநபர்களின் கருத்துக்களுக்கு பொறுப்பேற்க முடியாது. அவர்களின் தவறுக்கு அட்மின் குற்றம் சுமத்த முடியாது. வாட்ஸப் குழுவின் அட்மின் உறுப்பினர்களை சேர்க்கவும், நீக்கவும் மட்டுமே முடியும். அவர்களின் கருத்துக்கு முழுமையான பொறுப்பு அட்மின் தான் என்று கூற முடியாது." என தெரிவித்துள்ளனர். இதனால், கிஷோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்வதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WHATSAPP ADMIN HAPPY ABOUT NAGAPURI COURT


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->