காங்கிரஸ் கட்சியுடன் திரிணமூல் கட்சி இணைப்பு; எம்.பி கல்யாண் பானர்ஜி கூறியது என்ன..?
What did MP Kalyan Banerjee say regarding the merger of the Trinamool Congress with the Congress party
நடந்தது முடிந்த மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி படுத்தோல்வியடைந்த நிலையில், அக்கட்சிக்குள் அடுத்தடுத்து குழப்பங்கள் மிகுந்து நீண்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியை, காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அது குறித்து அக்கட்சியின் மூத்த எம்.பி கல்யாண் பானர்ஜி விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் இன்று அவர் பேசுகையில் கூறியதாவது; திரிணமூல் காங்கிரஸ் கட்சியை, காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப்போவதில்லை என்று கல்யாண் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

திரிணமூல் அதிருப்தி எம்.பிக்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் என்றும், அவர்கள் விரும்பியதைச் செய்து இனி பாஜகவின் நிழலில்கூட வாழட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அவர்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டுக்காக இந்த முடிவை எடுப்பதாக அவர்கள் சொல்கிறார்கள்.
ஆனால், தங்கள் தொகுதிகளுக்கே முழுமையாகச் செல்லாதவர்கள்தான் அவர்கள் என்பதை இங்கே பதிவு செய்கிறேன்என்று சுட்டிக்காட்டியதோடு, இனி என்ன வளர்ச்சியை தொகுதிக்கு செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை என்று விமர்சித்துள்ளார்.
அத்துடன், மேற்கு வங்கத்தில் ஜனநாயகத்தை அழித்துவிட்டனர் என்றும், ஒரு மாதத்தில் என்ன நடந்திருக்கிறது என்றும் தெரியவில்லை. இனி என்ன நடக்கும் என்றும் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று நாங்கள் இப்போது எதிர்கொள்ளும் நெருக்கடியைப் போல் இதற்கு முன்னர் எந்தவொரு எதிர்க்கட்சியும் நெருக்கடியை சந்திக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
பாஜக மட்டுமல்ல, மேற்கு வங்க மக்களுமே இப்போது எங்களை ஒடுக்குகிறார்கள் என்றும், இங்கிருந்து செல்லும் 19 எம்.பி.க்களை பாஜக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்பு திரிணமூல் எம்.பி. கீர்த்தி ஆசாத்தும் காங்கிரஸ் கட்சியுடன் திரிணமூல் இணைக்கப்படும் என்ற செய்திகளை தவறான தகவல் என்று மறுத்திருந்தார். அத்துடன், கடந்த ஜூன் 11 அன்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கேசி.வேணுகோபால் அளித்த பேட்டியிலும், திரிணமூல் காங்கிரஸுடன் இணைக்கிறார்கள் என்பது அடிப்படை ஆதாரமற்ற புரளி என்று கூறியிருந்தமை நினைவில் கொள்ளத்தக்கது.
English Summary
What did MP Kalyan Banerjee say regarding the merger of the Trinamool Congress with the Congress party