மேற்கு வங்க வன்முறை: தந்தை-மகன் கொலையில் முக்கிய குற்றவாளி கைது!
West Bengal violence main Aquest arrested
வக்பு சட்டத்தை எதிர்த்து மேற்கு வங்க மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நடந்த போராட்டம் மாறி வன்முறையில் முடிந்தது. இந்த வன்முறையில் பதற்றமான சூழல் உருவாக, சிலர் வாகனங்களை தீவைத்து அழித்தனர். போலீசாரை நோக்கி கற்கள் வீசும் சம்பவமும் நடைபெற்றது.
இந்த கலவரத்தில் தந்தை மற்றும் மகன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். அவர்கள் வீடு முதலில் கொள்ளையடிக்கப்பட்டு, பின்னர் இருவரும் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தனர். சம்பவ இடத்திலிருந்து தாக்குதலாளிகள் தப்பி ஓடினர்.
இந்தச் சம்பவத்தில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், தந்தை-மகன் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம், வக்பு சட்டத்தை எதிர்த்து எழுந்த போராட்டங்கள் எவ்வளவு தீவிரமாகவும் உயிரிழப்பிற்கு காரணமாகவும் மாறலாம் என்பதைக் காட்டுகிறது.
English Summary
West Bengal violence main Aquest arrested