பக்தர்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் - திருவிதாங்கூர் தேவசதிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சரங்குத்தியைக் கடந்து மரக்கூட்டம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அய்யப்பனை தரிசித்து வருகின்றனர்.

பக்தர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசாரும், திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகிகளும் திணறி வருகின்றனர். கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாவதை அறிந்த கேரள உயர் நீதிமன்றம், அது குறித்து தாமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. 

இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் அளித்த உத்தரவின் படி மண்டல - மகரவிளக்கு திருவிழாக்களால் சபரிமலையில் கட்டுக்கடங்காமல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

பல மணி நேர நெரிசலில் சிக்கி தவிக்கும் பக்தர்களுக்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு, குடிநீர் மற்றும் குளிர்பானங்களை வழங்க வேண்டும். அவர்களுக்கு உதவும் வகையில் சபரிமலை பாதையில் உள்ள முக்கிய வளைவுகளில் போதுமான தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும்.

போதுமான குடிநீர், சிற்றுண்டி ஆகியவற்றை அவர்களுக்கு வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள், நிலக்கல்லில் உள்ள தேவசம் போர்டுக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தப்படுவதை தேவசம் போர்டு உறுதி செய்ய வேண்டும்.
வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

water provide to sabarimalai devotees kerala high court order


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->