ஷேக் கலீஃபாவின் மறைவு! இந்தியா சார்பில் இரங்கலை தெரிவிக்க துணை ஜனாதிபதி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம்.! - Seithipunal
Seithipunal


ஷேக் கலீஃபாவின் மறைவு: இந்தியா சார்பில் இரங்கலை தெரிவிக்க துணை ஜனாதிபதி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்கிறார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் உடல்நிலை குறைவால் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

இதனையடுத்து அதிபரின் உடல் நேற்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் நீண்டநாள் ஆட்சியாளரான ஷேக் முகமது பின் சயீத் நல் நஹ்யான் அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

அதிபரின் மறைவிற்கு பல்வேறு நாட்டு அதிபர்களும், உலக தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இந்தியாவின் குடியரசு தலைவர், பிரதமர் நரேந்திர மோடி , வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அதிபரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், இந்தியா சார்பில் அதிபரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார்.

மேலும் அதிபரின் மறைவிற்கு இந்திய அரசு சார்பில் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

VP naidu visit to UAE to convey condolences


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->