நுபுர் சர்மாவை கைது செய்யக் கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை.. பரிதாபமாக பறிபோன உயிர்கள்.!! - Seithipunal
Seithipunal


ஞானவாபி மத வழிபாட்டு தளம் தொடர்பாக ஆங்கில செய்தி நிறுவனத்தில் கடந்த 27ஆம் தேதி நடந்த விவாதத்தில், பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் போது இந்து மத கடவுள் சிவலிங்கம் குறித்த விவாதத்தில் பங்கேற்ற நபர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த கருத்தை தொடர்ந்து பேசிய நுபுர் சர்மா, இஸ்லாமிய மதக் கடவுள்களின் இறை தூதர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். 

இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க தொடங்கியதை அடுத்து நுபுர் சர்மாவை கட்சியிலிருந்து நீக்கி பாஜக உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் நவீன் ஜீண்டாலையும் அக்கட்சி நீக்கியது. இதனிடையே மதக் கடவுள்களின் இறைத்தூதரை அவமதித்த தாக கூறி பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவை கைது செய்ய கோரி இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய மதத்தினர் நேற்று மதியம் மத வழிபாட்டுக்கு பின் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டங்கள் பல்வேறு பகுதிகளில் வன்முறையில் முடிந்தது. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். ராஞ்சியில் நடந்த வன்முறையின் போது பலர் படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த அடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

violence in ranchi 2 people death


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->