தெருநாய் கடியால் பாதிப்பு...! ஆறு மாதங்கள் கழித்து மாணவி உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்...! - Seithipunal
Seithipunal


மும்பையைச் சேர்ந்த 4-ம் வகுப்பு மாணவி சகானி, சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டார்.

அப்போது தடுப்பூசி செலுத்துவதற்காக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆனால் ஊசி என்ற பயத்தால் அச்சிறுமி தடுப்பூசி எடுத்துக்கொள்ள மறுத்துள்ளார். தொடக்கத்தில் உடல்நிலை சாதாரணமாக இருந்ததால் குடும்பத்தினர் பெரிதாக கவலைப்படவில்லை.

ஆனால் சில நாட்களுக்கு முன்பு திடீரென அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. உடனடியாக அவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், நேற்று முன்தினம் சிறுமி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Victim Stray Dog Bite Shocking Incident Student Dies Six Months Later


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->