தேர்தல் முன் அதிரடி ரெய்டு! கரூரில் செந்தில் பாலாஜி நெருங்கியவர் வீடு, அலுவலகங்களில் வருமானவரி சோதனை...! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபைத் தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் கண்காணிப்பை பலப்படுத்தி, ஒவ்வொரு நகர்வையும் கூர்மையாக கவனித்து வருகிறது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெறுகிறதா, பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க தொடர்ந்து அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனுடன் இணைந்து வருமான வரித்துறையும் திடீர் சோதனைகளின் மூலம் தேர்தல் முறைகேடுகளை கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகிறது.இந்த சூழலில், கரூரில் அரசியல் பரபரப்பை கிளப்பும் வகையில், செந்தில் பாலாஜியின் நெருங்கியவராக கருதப்படும் சங்கர் ஆனந்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல், கரூர் - கோவை சாலையில் இயங்கும் கொங்கு மெஸ் மற்றும் சக்தி மெஸ் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கரூர் தொகுதியில் அதிகளவில் பணப்பட்டுவாடா நடைபெறுகிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

மேலும், இந்த தேர்தலில் செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கதாகும்.இந்த தொடர் சோதனைகள், தேர்தல் நேரத்தில் முறைகேடுகளை கட்டுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுவதோடு, கரூர் அரசியல் சூழ்நிலையிலும் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Raid before election Income Tax raids house and offices Senthil Balaji close associate Karur


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->