மாயமான வெற்றி துரைசாமி: 8 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு! - Seithipunal
Seithipunal


முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசம் சுற்றுலா சென்ற போது வெற்றி துரைசாமி சென்ற கார் சட்லஜ் நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் கார் ஓட்டுனர் சடலமாகவும், வெற்றியின் உதவியாளர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட நிலையில் வெற்றியை காணவில்லை. 

இதனை அடுத்து போலீசார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெற்றியின் உடலை தீவிரமாக தேடி வந்தனர். 

இந்நிலையில் விபத்து நடைபெற்ற இடத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் வெற்றி துரைசாமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. 

விபத்து நடைபெற்று 8 நாட்களுக்கு பிறகு வெற்றியின் உடல் பாறைக்கு அடியில் சிக்கி இருந்த நிலையில் மீட்பு படை வீரர்கள் அவரது உடலை கண்டுபிடித்துள்ளனர். 

இதனை தொடர்ந்து மீட்கப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் என தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vetri Duraisamy body rescued after 8 days


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->