எனக்கு 26, உனக்கு 52.. இன்ஸ்டா காதலியை கொன்ற இளைஞர் கைது!
Uttar Pradesh Instagram love old ladyMurder
உத்தரபிரதேசம் ஆக்ராவில் அருண் (26) என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் வழியாக ராணி என்ற பெண்ணுடன் தொடர்பில் இருந்தார். ராணி உண்மையில் 52 வயதாக இருந்தாலும், Filter பயன்படுத்தி புகைப்படங்களை பதிவேற்றி இளம்பெண் போல நடித்து அருணை ஏமாற்றினார்.
முதல்முறையாக நேரில் சந்தித்தபோது, ராணியின் வயதும், அவருக்கு 4 குழந்தைகள் இருப்பதும் அருணுக்கு தெரியவந்தது. இதனால் கோபமடைந்த அருண், அவரிடம் இருந்து ரூ.1.5 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
பின்னர் அந்தப் பணத்தை திருப்பித் தருமாறு தொடர்ந்து வற்புறுத்தியதோடு, தன்னைத் திருமணம் செய்யவும் ராணி அழுத்தம் கொடுத்ததாக தகவல். இதனால் மேலும் ஆத்திரமடைந்த அருண், ராணியை ஊரின் ஒதுக்குப்புறப் பகுதிக்கு அழைத்துச் சென்று, அவரது தாவணியால் கழுத்தை நெரித்துக் கொலை செய்து உடலை அங்கிருந்து தூக்கி வீசினார்.
போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் அருண் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு, கொலைக்கான வழக்கு பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Uttar Pradesh Instagram love old ladyMurder