திமுக–காங்கிரஸ் முதல்கட்ட சந்திப்பு: 70 சீட் உறுதியாக வேண்டும்! ஸ்டாலினை ஒரு நிமிடம்! ஸ்டன்னாக்கிய ராகுலின் ரைட் ஹேண்ட்!
DMK Congress first phase meeting 70 seats are definitely needed Stalin for a minute Rahul right hand stunned
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் ஐவர் குழு இரண்டு நாட்களுக்கு முன் திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்தது. இது ‘மரியாதை நிமித்தமான அறிமுகக் கூட்டம்’ என்று அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டாலும், பின்னணி விவரங்கள் இது ஒரு முக்கிய அரசியல் பேச்சுவார்த்தை என்பதை வெளிப்படுத்துகின்றன.
காங்கிரஸ் சார்பில் ஏஐசிசி பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, டி.என்.சி.சி தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்றக் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் சந்திப்பில் பங்கேற்றனர். ஆனால் உண்மையான அரசியல் உரையாடல் நடந்தது ஸ்டாலினும் கிரிஷ் சோடங்கரும் இடையில்தான் என்று தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
ராகுல் காந்தியின் நெருங்கியவரும் தேர்தல் வியூக நிபுணருமான கிரிஷ் சோடங்கர், ஸ்டாலினிடம் நேரடியாக இரண்டு முக்கிய கோரிக்கைகளை வைத்ததாக கூறப்படுகிறது.
முதலாவது – காங்கிரஸ் இம்முறை 70 தொகுதிகள் போட்டியிட விரும்புகிறது.
முந்தைய தேர்தலில் 25 தொகுதிகள் மட்டுமே போட்டியிட்ட காங்கிரஸ், தற்போது வலுவடைந்ததை காரணமாக காட்டி அதிக இடங்களை கோரியுள்ளது. இந்த கோரிக்கை ஸ்டாலினுக்கு சம்மதமாக இல்லை என்றும், அவர் அதில் திருப்தியில்லாமல் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டாவது – தேர்தல் வெற்றி பெற்றால் அதிகாரப் பங்கீடு வேண்டும் என்ற கோரிக்கை.
அதாவது, திமுக அரசு அமைந்தால் அமைச்சரவை மற்றும் நிர்வாகத்தில் காங்கிரஸுக்கு முக்கிய பங்கீடு வழங்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இந்த கோரிக்கை, திமுக கூட்டணியை விட்டு TVK கூட்டணிக்கு செல்லும் வாய்ப்பை மறைமுகமாகக் காட்டும் வகையிலும் இருந்ததாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
சோடங்கரின் இந்த கோரிக்கைகள் ஸ்டாலினை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் எந்த உறுதியையும் வழங்காமல், “திமுக தொகுதி பங்கீட்டு குழு அமைந்த பிறகு மட்டுமே பேச்சுவார்த்தை தொடங்கும்” என மட்டுமே தெரிவித்தார்.
காங்கிரஸ் பொதுவெளியில் “இது அறிமுகக் கூட்டம் மட்டும்” என கூறினாலும், பின்னணி விவரங்கள் இது முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் சந்திப்பு என்பதைக் காட்டுகின்றன. திமுக கூட்டணியில் தொடர்வதா அல்லது TVK கூட்டணியை நோக்கி நகர்வதா? என்ற கேள்வி இன்னும் பதிலின்றி உள்ளது.
வரும் வாரங்களில் இந்த பேச்சுவார்த்தைகள் தீவிரமாகி, தமிழகத்தின் மிகப்பெரிய கூட்டணியின் எதிர்கால திசை தீர்மானிக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
English Summary
DMK Congress first phase meeting 70 seats are definitely needed Stalin for a minute Rahul right hand stunned