இயற்கை உபாதையை கழிக்க சென்ற பெண்மணிக்கு பிரசவம்.. குழந்தையை காட்டுவிலங்கு தூக்கி சென்ற சோகம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா மாவட்டம் ஜோதாபுரா கிராமத்தில் ஷில்பி என்ற கர்ப்பிணி பெண்ணொருவர் கடந்த செவ்வாய்க்கிழமை, காலைக்கடனை கழிப்பதற்காக அங்குள்ள திறந்தவெளி பகுதிக்கு சென்றுள்ளார். இந்த நேரத்தில், பெண்மணிக்கு அங்கேயே பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்துள்ளது. இவர் சென்ற இடத்திற்கு அருகே வனப்பகுதி உள்ள நிலையில், பெண்மணி குழந்தையை பிரசவித்து சுயநினைவின்றி மயக்கமடைந்துள்ளார்.

கர்ப்பிணி பெண்ணிற்கு பிறந்த குழந்தையை சில மணித்துளிக்கு உள்ளாகவே, காட்டு விலங்கு தூக்கி சென்றுள்ளது. பெண் மயக்கமடைந்த நிலையில் காட்டுப்பகுதியில் கிடைக்க, சந்தேகமடைந்த குடும்ப உறுப்பினர்கள் பெண்ணை தேடி அலைந்துள்ளனர். பலமணி நேரத்திற்கு பின்னர் பெண்ணை மீட்ட குடும்பத்தினர், அங்குள்ள மருத்துவமனையில் கொண்டு சென்று அனுமதி செய்துள்ளனர்.

மருத்துவமனையில் பெண்ணிற்கு தேவையான சிகிச்சையை மருத்துவர்கள் வழங்கிய நிலையில், இந்த விஷயம் தொடர்பாக பேசிய பெண்மணி, நான் திறந்த வெளியில் காலைக்கடனை கழிக்க சென்ற நேரத்தில் பிரசவ வலி ஏற்பட்டது. இதில் ஆண் குழந்தை எனக்கு பிறந்தது. பிரசவத்திற்கு பின்னர் நான் மயக்கமடைந்த நிலையில், இரண்டு மணிநேரத்திற்கு பின்னர் குடும்பத்தினர் என்னை மீட்டனர். இதில் குழந்தை என்னுடன் இல்லை என்பதை அவர்கள் தெரிவித்தனர் என கூறினார்..

இந்த விஷயம் தொடர்பாக பெண்ணின் கணவர் சுனில் சவுகான் தெரிவிக்கையில், அரசு வீட்டில் கழிப்பறை கட்டும் திட்டத்தின் கீழ் இங்கு பல வீடுகளில் கழிப்பறைகள் உள்ளது. ஆனால் எனது ஆதார் அட்டையில் முகவரி மாறி உள்ளது என்று கூறி, அந்த திட்டத்திற்கான நிதிஉதவி செய்ய கிராம தலைவர் மறுத்துவிட்டார். இப்போது எனது குழந்தைக்கு என்ன ஆனது? என்று கூட எங்களுக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Uttar Pradesh girl delivery baby in forest side Open place toilet baby missing


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->