உத்தரகாண்டில் பாதுகாப்பு இல்லாமல் 36 பாலங்கள் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 30-ந் தேதி மோர்பியில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட தொங்கு பாலம் மச்சு ஆற்றின் மீது அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. 

இந்தக் கோர விபத்தில் சுமார் 135 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயங்கர சம்பவத்தை அடுத்து உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள எல்லா பாலங்களையும் மூன்று வார காலத்தில் பாதுகாப்பு தணிக்கை செய்யுமாறு மாநில பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவின் படி, அங்குள்ள பாலங்கள் அனைத்தும் பாதுகாப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 

இதில், 36 பாலங்கள் போக்குவரத்துக்கு பாதுகாப்பில்லாமல் உள்ளதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து, பொதுப்பணித்துறை மூத்த அதிகாரி ஒருவர் நேற்று டேராடூனில் தெரிவித்ததாவது:- 

"மாநிலத்தில் சுமார் 36 பாலங்கள் வாகன போக்குவரத்துக்கு தகுதியற்றவையாக உள்ளன. பாவ்ரி மாவட்டத்தில் மட்டும் 16 பாலங்கள், தகுதியற்ற பாலங்கள் ஆகும். அதேபோல், தெஹ்ரியில் 8 பாலங்களும், உத்தம்சிங்நகரில் 5 பாலங்களும், அரித்துவாரில் 3 பாலங்களும், டேராடூன், பித்தோரகார், சமோலி, ருத்ரயபிரயாக் உள்ளிட்ட இடங்களில தலா ஒரு பாலமும் தகுதியற்ற நிலையில் உள்ளன" என்று அவர் தெரிவித்துள்ளார்.

பொதுப்பணித்துறை அளித்த பாதுகாப்பு தணிக்கை அளித்த அறிக்கையைத் தொடர்ந்து, இந்தப் பாலங்களை சரி செய்வதற்கு அல்லது அவற்றுக்கு பதிலாக புதிய பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பணித்துறைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதுகுறித்து, பொதுப்பணித்துறை உயர் அதிகாரி தெரிவித்ததாவது, "பயணிகளால் அடிக்கடி பயன்படுத்தப்படுகிற பாலங்களை மீண்டும் கட்டமைக்கவோ அல்லது புதிதாக கட்டவோ முன்னுரிமை அளிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

uthrakant state thirty six bridges not security


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->