இந்தியாவில் நாடு தழுவிய முழு ஊரடங்கு.. வெளியான தகவல்.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்க வெள்ளை மாளிகையில் தலைமை மருத்துவரும் மருத்துவ மருத்துவ ஆலோசகரும், உலகின் முன்னணி திருநோய் சிகிச்சை நிபுணருமான டாக்டர் அந்தோணி பவுசி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் தீவிரமாக இருக்கிறது. அதிக எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப்படும் போது மருத்துவமனைகளின் படுக்கைகள், ஆக்சிஜன் ஆகியவற்றுக்கு பற்றாக்குறை நிலவும் போது நிலைமை மோசமாகத்தான் இருக்கும். 

அதனால் தான், உலக நாடுகள் அனைத்தும் தங்களால் இயன்ற அளவிற்கு இந்தியாவிற்கு உதவ வேண்டும் என கருதுகிறோம். கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியா உடனடியாகவும் நீண்டகால அடிப்படையில் ஒரு சில காரியங்களை செய்ய வேண்டும். முதலில் தங்களால் முடிந்த அளவுக்கு அதிகமாக மக்களுக்கு ஒரு தடுப்பூசி போட வேண்டும். உடனடியாக தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் இந்திய ஏற்கனவே செய்த ஒரு நடவடிக்கையை இருக்கிறது. 

இப்போதும் இந்தியாவில் சில பகுதிகளில் அமுலில் இருக்கிறது. அதுதான் அதுதான் முழு ஊரடங்கு. முழு ஊரடங்கை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். ஆறு மாதங்களுக்கு அமல்படுத்த வேண்டியது அவசியமில்லை. சில வாரங்களுக்காவது அமல்படுத்தவேண்டும். கடந்த ஆண்டு சீனா கொரோனாவால் உருக்குலைந்தபோது இராணுவத்தைப் பயன்படுத்தி தற்காலிக மருத்துவமனை களைகட்டியது. அதே போல் இந்தியாவும் தனது ராணுவத்தை வைத்து போர்க்கால அடிப்படையில் தற்காலிக மருத்துவமனை கட்ட வேண்டும். அதன் மூலம் படுக்கைகள் தட்டுப்பாடு நீங்கும் என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

usa says about full lockdown in india


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->