பூனைக்காக உயிரைவிட்ட பெண்! உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
UP Woman Death for Cat Death
உத்தரப் பிரதேசம் மாநிலம், அம்ரோஹாவில், வளர்ப்பு பூனையின் மரணத்தால் மனவேதனை அடைந்த பெண் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
36 வயதான பூஜா என்பவர், தனது வளர்ப்பு பூனையை குழந்தையைப் போல நேசித்து பராமரித்து வந்துள்ளார். மேலும், கடந்த சில ஆண்டுகளாக பூஜா மனநலப்பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், பூஜாவின் வளர்ப்பு பூனை மூன்று நாட்களுக்கு முன் மரணமடைய, அதன் உடலை வீட்டிலேயே வைத்து அழுது கொண்டு இருந்துள்ளார்.
பின்னர் பூனையின் உடலை பூஜாவின் குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். ஆனால், இது பூஜாவின் மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், சோகத்தில் இருந்த பூஜா நேற்றைய தினம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
UP Woman Death for Cat Death