நாங்கள் முழு ஆதரவளிக்கிறோம்! செம்ம டிவிஸ்ட் வைத்த காங்கிரஸ்! பாஜக தரப்பு ரியாக்ஷன் என்ன?! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில், சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி, உத்தர பிரதேச மாநிலம், கோசி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த இடைத்தேர்தல் பாஜக சார்பாக தாரா சிங் காணும், சமாஜ்வாதி கட்சி சார்பில் சுதாகர் சிங்கும் போட்டியிடவுள்ளனர்.

இது சாதாரண இடைத்தேர்தல் என்பதாலும், பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துடனும் சமாஜ்வாதி கட்சி வேட்பாளருக்கு ஆதரவளித்து, காங்கிரஸ் கட்சி வேட்பாளரை அறிவிக்கவில்லை.

இந்நிலையில், கோசி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் சமாஜ்வாதிக் கட்சிக்கு முழு ஆதரவு அளிப்பதாக, காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது குறித்து அம்மாநில காங்கிரஸ் தலைவர் அஜய்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் சமாஜ்வாதி வேட்பாளர் சுதாகர் சிங்கருக்கு உங்களின் ஆதரவையும், தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அம்மாநில பாஜக துணை தலைவர் விஜய் பகதூர் தெரிவிக்கையில், காங்கிரஸ் கட்சி ஆதரவளிப்பது இது ஒன்றும் புதிதல்ல. வருகின்ற மக்களவைத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டே இவ்வாறு அவர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

மேலும் அவர்களின் கூட்டணியில் அந்த கட்சியை இணைப்பதற்கு உண்டான நடவடிக்கையாக நாங்கள் இதை பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UP ByElection 2023 sep


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->