உ.பி. பாஜக எம்பிக்கு 2 ஆண்டு சிறை! தகுதிநீக்கம்?! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேச மாநில பாஜக எம்.பி. ராம் சங்கர் கத்தேரியாவுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தகுதிநீக்கம் செய்யப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

கடந்த 2011ஆம் ஆண்டு டோரண்ட் பவர் நிறுவன அதிகாரியை தாக்கி விவகாரத்தில், முக்கிய குற்றவாளியாக ராம் சங்கர் கத்தேரியா சேர்க்கப்பட்டார் .

எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்துவந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 

அதன்படி, ராம் சங்கர் கத்தேரியா குற்றவாளி என்றும், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

மேலும், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் ரூ.50,000/- அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, எம்பி, எம்எல்ஏக்கள் 2 ஆண்டு அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றால், குற்றம் நிரூபிக்கப்பட்ட நாளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். மேலும், 8 ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டியிட முடியாது. 

அண்மையில் ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதுபோல், ராம் சங்கர் கத்தேரியாவும் எம்.பி. பதவியில் இருந்து விரைவில் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்று தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UP BJP MP Raam Shankar case judgement


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->