இந்தியாவிற்கு 14 - 16 சிவிங்கிப்புலிகள் கொண்டுவரப்பட உள்ளது - மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேட்டி.! - Seithipunal
Seithipunal


மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பாக மத்திய அரசு செய்துவரும் முயற்சிகள் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- 

"சிறுவயதில் இருந்தே வனவிலங்கு ஆர்வலராக இருக்கும் எனக்கு இந்த துறை மீதான ஆர்வமும், அக்கறையும் எப்போதும் உண்டு. அதுமட்டுமல்லாமல், வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் என் தந்தை முக்கியப் பங்காற்றியுள்ளார்.

நாட்டில் வனவிலங்குகளை பாதுகாப்பது, அவை பெருகுவதை உறுதி செய்வது என்பது நம் பாரம்பரியத்தின் ஒரு அங்கமாகவே இருந்து வருகிறது. அதனால், அவற்றை ஒரு பொக்கிஷமாக பாதுகாத்து, பராமரித்து நன்கு வளர்த்து, அதனை அடுத்த தலைமுறையினருக்கு அளிக்க வேண்டியது நம் தலையாய கடமை. 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசின் சிவிங்கிப்புலி பாதுகாப்பு திட்டத்தின் கீழ், தென்னாப்ரிக்கா நாட்டில் நமீபியாவில் இருந்து இந்தியாவிற்கு எட்டு சிவிங்கிப்புலிகள் கொண்டு வரப்பட்டன. 

அதனை, பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் தனது பிறந்தநாள் அன்று திறந்து விட்டார். தற்போது அனைத்து சிவிங்கிப்புலிகளும் நான்றாக உள்ளதால், மேலும் 14 - 16 சிவிங்கிப்புலிகள் தென்னாப்ரிக்காவில் இருந்து எடுத்து வரப்பட உள்ளது" என்றும் அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

union minister jyotiraditya scindia says 14 16 cheetahs be brought to india


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->