இயற்கைக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வரும் சக்தி ஜி20 நாடுகளுக்கு உள்ளது - ஐநா பொதுச்செயலாளர் - Seithipunal
Seithipunal


குஜராத் கேவாடியாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் ஆகியோர் 'மிஷன் லைஃப்' (சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை) குறித்த உலகளாவிய கருத்தரங்கை தொடங்கி வைத்தனர்.

ஒற்றுமை சிலை அமைக்கப்பட்டிருக்கும் பகுதியில் நடந்த இந்நிகழ்ச்சியில், உரையாற்றிய ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், தனிநபர்களும், சமூகங்களும் நமது பூமியைப் பாதுகாப்பதற்கான தீர்வின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.

இந்தியா போன்ற நாடுகளுக்கு அர்த்தமுள்ள நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதற்கு வளர்ந்த நாடுகள் தங்கள் உறுதிமொழிகளை பின்பற்ற வேண்டும்.

நாம் ஒரு புதுப்பிக்கத்தக்க புரட்சியை கட்டவிழ்த்துவிட வேண்டும் என்றும், இதில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற எதிர்நோக்குகிறோம் என்று தெரிவித்தார். காலநிலை தாக்கத்தால் இந்தியாவின் பாதிப்பு மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதாரம் ஆகியவற்றால், வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளுக்கு இடையே நம்பிக்கையை வளர்ப்பதில் இந்தியா முக்கியமான பாலமாக அங்கம் வகிக்க முடியும். 

உலகளவில் பசுமை இல்லவாயு வெளியேற்றத்தில் ஜி20 நாடுகள் தான் 80 சதவீதம் பங்களிக்கின்றன. மேலும் உலகளாவிய ஜிடிபியில் ஜி20 நாடுகள் தான் 80 சதவீதம் பங்களிக்கின்றன என்றும், இயற்கைக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வரும் சக்தி ஜி20 நாடுகளுக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UN general secretary says G20 countries have power to end war on nature


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->