மகாராஷ்டிரா அரசியலில் அடுத்த பஞ்சாயத்து..! நாட்டாமை பணியில் உத்தவ் தாக்கரே..!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் கொள்கை ரீதியாக முரண்பாடு கொண்ட சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய காட்சிகள் இணைந்து கூட்டணியை அமைத்து ஆட்சி செய்து வருகிறது. இந்த கூட்டணி ஆட்சி அமைந்த நாட்கள் முதலாகவே, 3 கட்சியை சார்ந்த தலைவர்களும் தனித்தனி கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். 

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியினை சார்ந்த பத்திரிகை பக்கத்தில் வீர சாவர்க்கர் குறித்து கடுமையான விமர்சனம் எழுப்பப்பட்டது. மேலும், இந்துத்துவா கொள்கையினைக்கொண்ட சிவசேனா வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் சார்பாக வெளியிடப்பட்ட கட்டுரை கூட்டணிக்குழப்பதை ஏற்படுத்தியுள்ளது. இதனால் முதலைச்சர் உத்தவ் தாக்கரே தர்ம சங்கடமான சூழ்நிலைக்கு உள்ளாகியுள்ளார். 

இந்த நிலையில், இவர்களின் மகாவிகாஸ் அகாடி கூட்டணி ஒருங்கிணைப்பு கமிட்டியில் இருக்கும் மூன்று கட்சி தலைவர்களையும் சந்தித்த முதல்வர் உத்தவ் தாக்கரே இது தொடர்பாக பேசி, சர்ச்சையான கருத்துக்களை கூற வேண்டாம் என்று அறிவுறுத்தி சென்றுள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

uddhav thackeray speech about alliance leaders


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->