UAE அதிபர் ஷேக் கலீபா மறைவு.. இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிப்பு.! - Seithipunal
Seithipunal


ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலிபா பின் சையத் அலி நஹ்யன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 74. அவரது மறைவுக்கு அந்நாட்டு அதிபர் விவகாரத்துறை அமைச்சகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

கடந்த 2004ம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு அமீரக தலைவராக ஷேக் கலிபா பின் சையத் இருந்து வந்தார். உலகின் பணக்கார மன்னர்களில் ஒருவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு அமீரக தலைவர் ஷேக் கலிபா பின் சையத் மறைவையடுத்து, அந்நாட்டில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சகங்கள், அரசு துறைகள், தனியார் நிறுவனங்கள் என அனைத்தும் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரக அதிபர் சேக் கலீபா பின் சயத் அல் நகியான் மறைவுக்கு இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் நாளை தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கும், அரசு விழாக்கள் நடைபெறாது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

UAE President Sheikh Khalifa passes away in India honoured tomorrow


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->