சபரிமலை யாத்திரையில் மாரடைப்பால் 2 தமிழக பக்தர்கள் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த கார்த்திகை மாதம் முதல் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. அன்று முதல் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், மண்டல பூஜை நிறைவடைந்து தற்போது மகரவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. அதன் படி, சபரிமலை பொன்னம்பல மேட்டில் வருகிற 14-ந் தேதி மகர ஜோதி தரிசன நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 

இந்த நிகழ்ச்சியைக் காண்பதற்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலைக்கு வந்து தரிசனம் செய்த வண்ணம் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை என்பது ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. 

வருகிற மகர ஜோதி தரிசன நாளில் இந்த எண்ணிக்கை லட்சத்தை தாண்டும் என்று கோவில் தேவஸ்தான நிர்வாகிகள் எதிர்ப்பார்க்கிறார்கள். இதற்காக சபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக பலப்படுத்தப்பட்டுள்ளன. 

இதற்கிடையே, சபரிமலைக்கு யாத்திரை மேற்கொண்டிருந்த விருதுநகரை சேர்ந்த முருகன் மற்றும் சென்னை மயிலாப்பூரை சேர்ந்த கன்னியப்பன் உள்ளிட்டோர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். இரண்டு ஐயப்ப பக்தர்கள் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two tamilnadu devotes died in sabarimala yathra for heart attack


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->