டேய்.. இதெல்லாம் ரொம்ப ஓவர்டா... திருமண அழைப்பிதழில் புது பார்மேட்.. மணமக்கள் வீட்டார் கொண்டாட்டம்.! - Seithipunal
Seithipunal


திருமணங்கள் என்றாலே ஆரவாரத்திற்கும், கொண்டாட்டத்திற்கும் பஞ்சமே இருக்கிறது. உற்றார், உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளின் போதும், திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளின் போதும், தம்பதிகளின் ஜோடிப்பொருத்தத்தை இறுதிவரை காண்பிக்க போட்டோ உதவி செய்கிறது. 

அதனைப்போன்று, தற்போதுள்ள காலங்களில் பிளக்ஸ் பேனர், திருமண அழைப்பிதழ் என பல்வேறு வகையில் வித்தியாசமான முறைகளை மேற்கொண்டு மக்களை கவர்ந்து வருகின்றனர். இவ்வாறான திருமண அழைப்பிதழ்கள் மற்றும் பேனர்கள் சில சமயம் வைரலாவது உண்டு. 

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்ப பயன்படும் புகைப்படத்தை உபயோகம் செய்து, அதனை திருமண வரவேற்பு அழைப்பிதழாக மாறியுள்ள அழைப்பிதழ் வைரலாகி வருகிறது. 

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் நெடுங்காடு பகுதியை சார்ந்தவர் உருவாக்கிய அந்த திருமண வரவேற்பு அழைப்பிதழ் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்த அழைப்பிதழில் முதல் புகைப்படத்தில் தலைப்பு செய்திகளில் திருமண விழா அழைப்பிதழ் என்றும், 16 ஆம் தேதி வரவேற்பு நடைபெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மற்றொரு புகைப்படத்தில், திருமணத்தின் வரவேற்பாளர்கள், திருமண தம்பதிகள் மெரினா மற்றும் அனீஸ், திருமணம் நடைபெறும் இடமான எஸ்.எஸ். இராமச்சந்திரன் நாடார் திருமண மண்டபம், சிறப்பு அழைப்பாளர்கள் ஆர்.கமலக்கண்ணன், மாரிமுத்து, கே.சிவகுமார், எம்.கதிரவன் மற்றும் அழைப்புடன் என்று அந்தோணி முத்து, ஜாக்குலின் பேபி, பெர்லின் கண்ணா என திருமண வீட்டின் முக்கியஸ்தர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trending Marriage Invitation about News Template Format Pondichery Karaikal


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->