பயிற்சி விமானம் விபத்து: விமானிகளின் நிலை என்ன? - Seithipunal
Seithipunal


இந்திய விமான படையின் பயிற்சி விமானம் ஹைதராபாத் அருகே விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கானா, மேடக் மாவட்டத்தில் பயிற்சி விமானம் ஒன்று இன்று காலை 8.30 மணி அளவில் விபத்துக்குள்ளானது. பயிற்சி விமானம் பாறைகளுக்கு இடையே விழுந்ததில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. 

இந்த விபத்தில் இரண்டு விமானிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு பின்னர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஹைதராபாத்தில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் நடைபெற்றுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Training plane crash 2 pilots died


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->