நடனமாடியபடி சென்று ஏழுமலையானை தரிசித்த பக்தர்! இளைய சமூகத்திற்கு விழிப்புணர்வு! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம்: பல்நாடு மாவட்டத்தில் உள்ள நரசராவ்பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணவாசு. இவர் பரதநாட்டிய கலைஞர் ஆவார். இவர் கொட்டப்பகொண்டா பகுதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா வேத விஞ்ஞான பீடத்தில் சமஸ்கிருத ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 

பரத நட்டியத்தில் சிறந்து விளங்கும் கிருஷ்ணவாசு, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நடனமாடியபடி மலையேறி வருவதாக வேண்டியுள்ளார். 

அதனை நிறைவேற்றும் வகையில் நேற்று ஸ்ரீவாரிமெட்டுப் மலைப்பாதையில் நடனமாடி கொண்டு திருப்பதி மலைக்கு சென்றுள்ளார். இந்த மலைப்பாதையில் வழக்கமாக நடந்தபடி சென்றால் திருமலையை அடைய சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாகும். 

ஆனால் கிருஷ்ணவாசு சங்கீத மகான்களான அன்னமய்யா, தியாகராஜர் கீர்த்தனைகளுக்கு உரிய பாடல்களை பாடிக்கொண்டு படிக்கட்டுகளில் நடனமாடியபடி 75 நிமிடத்தில் ஏறி சென்றுள்ளார். 

பக்தர்கள் கிருஷ்ணாவாசு நடனமாடியபடி சென்றதை அவர்களது செல்போனில் வீடியோ மற்றும் போட்டோ எடுத்தனர். இது குறித்து அவர் தெரிவிக்கையில், 'இளைய சமூகத்தினரிடையே நமது கலாச்சார சங்கீதம், நடனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது' என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupati young man awareness pray


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->