திருப்பதியில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கான தரிசனம் டிக்கெட் நாளை வெளியீடு.! - Seithipunal
Seithipunal


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள் டிசம்பர் மாதம் தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட் நாளை வெளியிடப்படுகிறது.

ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில், இந்தியாவில் உள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த முக்கிய திருத்தலங்களில் ஒன்றாகும். இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் பெற டிசம்பர் மாதத்திற்கான, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோய்களால் அவதியுறுபவர்களுக்கான டிக்கெட்டுகள், நாளை காலை 10:00 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

பக்தர்கள் இந்த டிக்கெட்டுகளை இலவசமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் தரிசனம் செய்ய வரும், மூத்த குடிமக்கள் வயது சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் மற்றும் நீண்ட கால தீராத நோய் உள்ளவர்கள் மருத்துவ சான்றிதழை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupati Darshanam tickets for differently abled and senior citizens will be released tomorrow


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->