பாஜக RSS இடையே முரண்பாடு உள்ளது!பாஜக தலைவரை நாங்கள் முடிவு செய்வதில்லை: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!
There is a conflict between BJP and RSS We do not decide the BJP leader RSS Chief Mohan Bhagwat
பாஜக தேசிய தலைவராக தற்போது ஜே.பி. நட்டா உள்ளார். அவர் இரண்டு முறை அந்தப் பொறுப்பை வகித்துள்ளதால், கட்சியின் விதிமுறைப்படி புதிய தலைவரை நியமிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த தேசிய தலைவரை தேர்வு செய்யும் பணியில் பாஜக மேலிடம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
பாஜக தேசிய தலைவர் பொதுவாக ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்டவராக இருப்பார். எனவே, இந்தத் தேர்தலில் ஆர்எஸ்எஸ் அமைப்பு முக்கிய பங்கு வகிக்கும் என்ற பார்வை நிலவுகிறது. “ஆர்எஸ்எஸ் கைக்காட்டும் நபரே பாஜகவின் தேசிய தலைவராவார்” என்ற அரசியல் வட்டாரங்களின் கணிப்பும் வலுப்பெற்று வருகிறது.
இந்நிலையில், ஆர்எஸ்எஸ் தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவு விழா மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் மூன்று நாட்கள் நடைபெற்றது. அந்த விழாவில் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் உரையாற்றினார்.
அவர் தனது பேச்சில் கூறியதாவது:“உங்களுடைய நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் எதையும் கட்டாயப்படுத்தப் போவதில்லை. நாங்கள் முடிவு செய்கிறோம் என்றால், இவ்வளவு காலம் எடுத்திருக்க மாட்டோம்.
ஆர்எஸ்எஸ் அமைப்பை இயக்குவதில் நாங்கள் நிபுணர்கள். அரசை இயக்குவதில் பாஜக நிபுணர்கள். நாங்கள் ஒருவருக்கொருவர் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் நிலை மட்டுமே உள்ளது. எங்கும் மோதல் இல்லை. ஆனால் எல்லா பிரச்சனைகளிலும் ஒரே பக்கம் இருப்பது சாத்தியமற்றது.நாங்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடன் செயல்படுகிறோம்” என்று அவர் தெளிவுபடுத்தினார்.
English Summary
There is a conflict between BJP and RSS We do not decide the BJP leader RSS Chief Mohan Bhagwat