கள்ளக்காதலனின் மனைவி மீது ஆசிட் வீசிய கள்ளக்காதலி.! "உன்னை விட நான் அழகாக இருக்கிறேன்" என்றதால் ஆத்திரம்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் கள்ளக்காதலனின் மனைவி மீது பெண் ஆசிட் ஊற்றிய சம்பவம் பெறும் பரப்பரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டம் யசோதா நகர் பகுதியை சேர்ந்தவர் டிரைவர் புரங்கி வர்மா. இவரது மனைவி லதா(24). இவர்களுக்கு இரண்டு வயது ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் புரங்கி வர்மாவுக்கு அதேபகுதியை சேர்ந்த ஜியா(25) என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. 

இதையறிந்த லதா, ஜியாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது உன்னை விட நான் மிகவும் அழகாக இருக்கும்போது என் கணவர் உன் மீது ஏன் காதலில் விழுந்தார் என்று ஜியாவை பார்த்து லதா கேள்வி கேட்டுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த ஜியா லதாவை பழிவாங்க எண்ணி திட்டம் தீட்டியுள்ளார். இதில் கடந்த சனிக்கிழமை லதாவுக்கு வெறொரு செல்போன் எண்ணில் இருந்து போன் செய்த ஜியா, அடையாளம் தெரியாத நபர் போல் பேசி உங்கள் கணவரின் கள்ளத்தொடர்பு குறித்து உங்களிடம் சில ரகசியங்களை சொல்ல வேண்டும். அதனால் நீ குண்டலால் குப்தா நகருக்கு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து லதா தனது 2 வயது மகனை தூக்கிக்கொண்டு குப்தா நகருக்கு சென்றுள்ளார். அப்பொழுது லதா நடந்து சென்றுகொண்டிருந்தபோது புர்கா உடை அணிந்து பைக்கில் தனது தோழியுடன் வந்த ஜியா, லதாவை இடைமறித்து தான் வைத்திருந்த ஆசிட்டை லாதாவின் முகத்தில் வீசிவிட்டு பைக்கில் தப்பிச் சென்றுள்ளார்.

இதில் லதா மற்றும் அவரது 2 வயது மகன் முகம் உள்பட உடலில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து படுகாயமடைந்த லதா மற்றும் குழந்தையை மீட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், லதா மற்றும் குழந்தையின் மீது ஆசிட் வீசிய ஜியாவை கைது செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The woman who threw acid on her illegal boyfriend wife in Maharashtra


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->