பாலியல் வன்கொடுமை வழக்குகளில் நீதிமன்றங்களின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்; புதிய விதிமுறைகளை வகுத்துள்ள உச்சநீதிமன்றம்..!
The Supreme Court has laid down new rules regarding the courts controversial opinions in sexual cases
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, 'பெண்களின் மார்பகங்களை பிடிப்பது, ஆடையை இழுப்பது போன்றவை பாலியல் வன்கொடுமை ஆகாது', என அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறித்த உத்தரவு குறித்து , உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்திய அதற்கு தடை விதித்தது.
இந்நிலையில், இந்த வழக்கு புதிய தலைமை நீதிபதி சூர்யகாந்த் சர்மா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சோபா குப்தா என்ற மூத்த வழக்கறிஞர் வாதிடுகையில்,
அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், கோல்கட்டா மற்றும் ராஜஸ்தான் உயர் நீதிமன்றமும் இதேபோன்ற கருத்துகளை தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன் பின்னர், மற்றொரு வழக்கறிஞர், விசாரணை நீதிமன்றத்தில் ஆன்லைன் முறையிலான விசாரணையின் போது பெண் ஒருவர் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கூறியதாவது:
இதுபோன்ற உத்தரவுகள் மற்றும் கருத்துக்கள், பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்கள் பயத்தினால், தங்களது கருத்தை வெளிப்படுத்துவதை தடுக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது. அத்துடன், வழக்கை திரும்பப் பெறுவதற்கான அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர் என்றும் சுட்டி காட்டியுள்ளது.
இது போன்ற தகவல்கள் சேர்த்த பிறகு, உயர்நீதிமன்றங்களுக்கு என விதிமுறைகள் வகுக்கப்படும் என்றும் , பாலியல் வழக்குகளை விசாரிக்கும் உயர்நீதிமன்றங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு இந்த விதிமுறைகள் பேருதவியாக இருக்கும்.என்று உச்ச நீதிமன்ற அமர்வு கூறியுள்ளது.
English Summary
The Supreme Court has laid down new rules regarding the courts controversial opinions in sexual cases