இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் மாஹே: கடற்படையிடம் ஒப்படைப்பு..!
The first Indian made anti submarine warfare ship Mahe handed over to the Navy
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பலை கடற்படை பெற்றுக் கொண்டது. இந்த கப்பல் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டு வரும் 08 கப்பல்களில் முதலாவது கப்பால் இதுவாகும்.
புதுச்சேரியின் வரலாற்று சிறப்பு மிக்க துறைமுக நகரமான மாஹேவை நினைவு கூறும் வகையில் இந்தக் கப்பலுக்கு அந்நகரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பல் 78 மீட்டர் நீளம் கொண்டதும், 1,100 டன் எடையை தாங்ககூடியது. சக்தி வாய்ந்த இந்த கப்பலில் நவீன ரக துப்பாக்கிகள், ராக்கெட்கள், ரேடார்கள் நீருக்கடியில் இருக்கும் அபாயங்களை கண்டுபிடிக்கும் கருவிகள் உள்ளிட்டவை இந்த கப்பலில் உள்ளன. நீருக்கடியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும், நீருக்கடியில் இருக்கும் தனிமங்களை கண்டு பிடிக்கவும் இந்த கப்பல் பயன்படும்.

இந்த நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பலில் உள்ள 80 சதவீத உபகரணங்கள் இந்தியாவிலேயே தயாரானவை. அத்துடன், அதன் வடிவமைப்பு முதல், அனைத்து சாதனங்களும் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது. தன்னிறைவு பாரதம் என்ற நிலை நோக்கி இந்தியா முன்னேறி வருவதை இது காட்டுகிறதோடு, கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் இந்தக் கப்பலை கடற்படை அதிகாரிகள் பெற்றுக் கொண்டுள்ளனர்.
குறித்த போர்க்கப்பல் விரைவில் சோதனைக்கு பிறகு கடற்படையில் இணைக்கப்படும் என்றும், கடற்படை பணியில் ஈடுபடும் போது, கடற்படையின் பலம் இன்னும் வலிமை பெறும் என கடற்படை தெரிவித்துள்ளது. இதேவேளை, இது போன்று இன்னும் 07 கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன நிலையில், இவை விரைவில் கடற்படை வசம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
The first Indian made anti submarine warfare ship Mahe handed over to the Navy