அலறும் திமுக கூட்டணி கட்சி! பாஜக பழிவாங்கும் ஆயுதமா ED, CBI இருக்கு! இதுல இது வேறயா! உடையும் திமுக கூட்டணி! - Seithipunal
Seithipunal


நாட்டில் ஜனநாயகத்தை பாதிக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு சட்டமுன்வடிவுகளை கொண்டு வந்துள்ளதாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் மற்றும் பண்ருட்டி MLA வேல்முருகன் பரபரப்பான அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அமித்ஷா ஆகஸ்ட் 20, 2025 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அரசியலமைப்பு (130வது திருத்தம்) மசோதா, யூனியன் பிரதேசங்கள் (திருத்தம்) மசோதா 2025 மற்றும் ஜம்மு-காஷ்மீர் மறு சீரமைப்பு (திருத்தம்) மசோதா 2025 குறித்து அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

130வது திருத்த மசோதா படி, ஒரு மக்கள் பிரதிநிதி “30 நாட்கள் தொடர்ச்சியாக சிறையில் இருந்தாலோ, அல்லது 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெறக்கூடிய குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்டாலோ” அவரை குடியரசுத் தலைவர், பிரதமரின் ஆலோசனையின் பேரில் பதவியிலிருந்து நீக்க முடியும். பிரதமர் ஆலோசனை வழங்காவிட்டாலும், 31வது நாளில் அவர் தானாகவே பதவியை இழக்க வேண்டும் எனவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் மசோதா நகல்களை கிழித்து எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், இந்த மூன்று மசோதாக்களையும் கூட்டுக் குழு ஆய்விற்கு அனுப்புவதாக உள்துறை அமைச்சர் அறிவித்தார்.

வேல்முருகன் தனது அறிக்கையில்,

இது எதிர்க்கட்சிகளை அடக்குவதற்கான பாசிச முயற்சி என்று குற்றம்சாட்டியுள்ளார்.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாவிட்டாலும், 30 நாள் சிறைத் தண்டனை மட்டும் இருந்தாலே பதவி நீக்கம் செய்யலாம் என்ற விதி, இயற்கை நீதிக்கு எதிரானது என அவர் கூறினார்.

குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர்கள் மற்றும் யூனியன் பிரதேச ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பதன் மூலம், மசோதா ஒன்றிய அரசின் சர்வாதிகார போக்கை வெளிப்படுத்துகிறது என்றும் வலியுறுத்தினார்.

மேலும், ஏற்கனவே அமலாக்கத் துறை (ED), சிபிஐ (CBI) போன்ற மத்திய அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை குறிவைத்து வரும் பாஜக அரசு, இப்போது சட்டத்தின் பெயரில் மேலும் அதிகாரம் பெற்றுக் கொள்ள முயல்கிறது என்றார்.

“மோடி தலைமையிலான ஒன்றிய அரசு உண்மையான நோக்கங்களை மறைக்க இந்த மசோதாக்களை கொண்டு வந்துள்ளது. இது நாட்டின் ஜனநாயகத்திற்கு பேராபத்தானது. எனவே, அனைத்து எதிர்க்கட்சிகளும், ஜனநாயக அமைப்புகளும் ஒன்று சேர்ந்து இந்த சட்டமுன்வடிவுகளை திரும்ப பெற போராட வேண்டும்” என்று தனது அறிக்கையில் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The DMK alliance party is screaming Is the BJP a weapon of revenge ED CBI are there Is this different from this The DMK alliance is falling apart


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->