இரு கட்டங்களாக நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு..!
The census will be conducted in two phases
நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் 2026 ஏப்ரல் முதல் 2027 பிப்ரவரி வரை இரு கட்டங்களாக நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் லோக்சபா காங்கிரஸ் எம்.பி., ராகுல் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப் பூர்வமாக பதில் அளிக்கையில் இதனைதெரிவித்துள்ளார். மேலும், அவருடைய குறிப்பிட்டுள்ளதாவது:
''மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது 02 கட்டங்களாக நடத்தப்படும். முதல் கட்ட கணக்கெடுப்பு 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் வசதிக்கு ஏற்ப 30 நாட்களுக்குள் நடத்தப்படும். இதில் வீடுகளின் பட்டியல் கணக்கெடுக்கப்படும்.

இரண்டாம் கட்ட கணக்கெடுப்பில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். இது பிப்ரவரி 2027-இல் நடைபெறும். ஏப்ரல் 30-இல் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவால் முடிவு செய்யப்பட்டவாறு, 2027-இல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது ஜாதி கணக்கெடுப்பும் எடுக்கப்படும்.'' என்று உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
The census will be conducted in two phases