குடிநீரில் கலந்த கழிவு நீர் - புதுச்சேரியில் 10 -க்கும்மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி.!!
ten more than peoples admitted hospital for drianage water mixing drinking water in puthuchery
புதுச்சேரி மாநிலத்தில் உருளையன்பேட்டை மற்றும் நெல்லித்தோப்பு உள்ளிட்ட தொகுதிகளில் வசிக்கும் சிலருக்கு கடந்த 7-ந் தேதி வயிற்று போக்கு ஏற்பட்டது. அவர்களில் 3 பேர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இதையடுத்து பொது பணித்துறையினர் மேற்கொண்ட ஆய்வில், முத்தரையர் பாளையத்தில் இருந்து நகரப் பகுதிக்கு வரும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் கலந்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. உடனடியாக இந்த உடைப்பு சீரமைக்கப்பட்டது.
இந்த நிலையில் நெல்லித்தோப்பு தொகுதி பெரியார் நகர், ராஜய்யா தோட்டம், புது அய்யனார் கோவில் தெரு பகுதிகளை சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்டடோர் நேற்று மாலை வாந்தி, வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
அவர்களில், 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தெடர்ந்து அப்பகுதிகளில் சுகாதாரத்துறையினரும் முகாமிட்டு சுகாதார பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
English Summary
ten more than peoples admitted hospital for drianage water mixing drinking water in puthuchery