பயணிகளை தவிக்க விட்ட  கோ பர்ஸ்ட் விமானம் - ரூ. 10 லட்சம் அபராதம்.!  - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் இருந்து கடந்த 9-ம் தேதி டெல்லிக்கு 'கோ பர்ஸ்ட்' என்ற விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் பயணிகளின் உடைமைகள் ஏற்றப்பட்ட நிலையில் ஐம்பத்தைந்து பயணிகளை ஏற்றாமல் விமானம் புறப்பட்டுச் சென்றது. 

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 'கோ பர்ஸ்ட்' விமான நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டு, விமானத்தில் பணியில் இருந்த அனைத்து ஊழியர்களையும் பணி நீக்கம் செய்துள்ளது. 

மேலும், பாதிக்கப்பட்ட பயணிகள் அனைவரும் தங்கள் விமானத்தில் அடுத்த ஓராண்டுக்கு இந்தியாவிற்குள் எந்த இடத்திற்கும் இலவசமாக பயணம் செய்யலாம் என்றும் 'கோ பர்ஸ்ட்' விமான நிறுவனம் அறிவித்தது. 

இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து, சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து கோ பர்ஸ்ட் நிறுவனம் அலட்சியமாக செயல்பட்டதாக, சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் 10 லட்ச ரூபாய் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதற்கு முன்பாக, ஏர் இந்தியா விமானத்தில் ஆண் பயணி பெண் பயணி மீது சிறுநீர் கழித்த இரண்டு சம்பவங்களில் விமான நிறுவனத்திற்கு மொத்தம் 40 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ten lakhs fined to go first airplane for leaving passanger in airport


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->