முன்னாள் முதலமைச்சரின் மகள் கைது - நீதிமன்றத்தில் இன்று ஆஜர்.! - Seithipunal
Seithipunal


தெலங்கானா மாநிலத்தின் முன்னாள் முதல்வரின் மகளும் மேலவை உறுப்பினருமான கவிதா மீது டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத் துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், அவர் கைது செய்யப்படாததால், சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் ரகசிய உடன்பாடு இருப்பதாக காங்கிரஸார் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று டெல்லியில் இருந்து வருமான வரி மற்றும் அமலாக்க துறை அதிகாரிகள் 10 பேர், ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கவிதாவின் வீட்டுக்கு சென்று கவிதா, அவரது கணவர் அனில் உட்பட வீட்டில் இருந்த அனைவரது செல்போன்களையும் கைப்பற்றி தீவிரசோதனை நடத்தினர். 

அதன் பின்னர், டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதா மூலமாக ரூ.100 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக கூறி வாரன்ட் வழங்கிய அமலாக்கத் துறையினர் அவரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து கவிதாவை அமலாக்கத் துறையினர் நேற்று இரவு 8.40 மணியளவில் விமானத்தில் டெல்லிக்கு அழைத்து சென்றனர்.

இந்த நிலையில் கவிதாவை டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜர்படுத்த உள்ளனர். இதற்கிடையே, கவிதா வீடு முன்பு குவிந்த பிஆர்எஸ் கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

telangana ex cm daughter kavitha arrest


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->