கொரோனா நிவாரணம் : அறிவித்த இரண்டு மணி நேரத்தில் அதிர்ச்சி கொடுத்த டாடா குழுமம்!  - Seithipunal
Seithipunal


உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவலானது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவிலும் அதனுடைய தீவிரத்தை தற்பொழுது காட்டி வருகிறது. தற்போதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆனது ஆயிரத்தை நெருங்கி  இந்தியாவை அதிர வைத்துள்ளது. 

இதனையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை இந்திய அரசு தீவிரமாக எடுத்துவருகிறது. நாட்டில் உள்ள பொது மக்களிடத்தில் அனைவரிடத்திலும், பிரதமர் நிவாரண நிதி கேட்டு இந்திய பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று பலரும் பிரதமர் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற நிதியினை அளித்து வருகிறார்கள். 

இதில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் இந்தியாவில் அதிகப்படியான பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கும் பெரும் நிறுவனங்களில் ஒன்றான டாட்டா குழுமம் 1500 கோடி ரூபாயை அறிவித்து பலரது வரவேற்பை பெற்றுள்ளது. 

முன்னதாக டாடா அறக்கட்டளை சார்பாக 500 கோடி அறிவிக்கப்பட்டதையடுத்து, அடுத்த இரண்டு மணி நேரத்தில் டாட்டா சன்ஸ் மேலும் ஆயிரம் கோடியை தடுப்பு நடவடிக்கைகள் பணிகளுக்காக ஒதுக்குவதாக அறிவித்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது. 

ஒரே நிறுவனம் ஆயிரத்து 500 கோடியை அளித்திருப்பது பலரிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதேபோல இந்தியாவில் பெரிய அளவில் இயங்கி கொண்டிருக்கும் அனைத்து நிறுவனங்களும் தாமாக முன்வந்து பெரிய அளவிலான தொகையை கொடுத்து நாட்டை காப்பாற்றுவதற்கு முக்கிய பங்காற்ற வேண்டும் என அனைவரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tata’s Donate 1500 Crore 1000 By Tata Sons And 500 By Tata Trusts to PMCaresFund


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->