தேர்தலில் இந்த முறை வெற்றி தான் - சுரேஷ்கோபி உறுதி! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகியுள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

கேரளாவில் காங்கிரஸ்m, பாரதிய ஜனதா, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. 

மேலும் பாரதிய ஜனதா கட்சி 12 தொகுதி வேட்பாளர்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திருச்சூர் தொகுதி வேட்பாளராக நடிகர் சுரேஷ் கோபி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் வேலைகளை தொடங்கியுள்ளார். 

நேற்று திருச்சூர் சென்ற அவருக்கு பாரதிய ஜனதா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர் அவர்களிடம் பேசிய நடிகர் சுரேஷ் கோபி, 

பிரதமர் மோடியின் தாக்கமும் செல்வாக்கும் தற்போது உலகம் முழுவதும் பரவி உள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இங்கு இருக்கிறேன். சினிமா நடிகனாக அல்ல அரசியல் சேவனாக. 

தேர்தலில் முதலில் 2019 ஆம் ஆண்டு போட்டியிட்டேன். பிறகு 2021 ஆம் ஆண்டு போட்டியிட்டேன். ஆனால் இந்த முறை வெற்றியை பெறுவேன். 

திருச்சூர் மக்கள் தலைமையில் கிரீடத்தை பெறுவேன். இந்த முறை எனக்கு திருச்சூர் தருவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். 

நான் எம்.பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் சினிமாவை விட மாட்டேன். அது எனது வர்த்தகத்தின் ஒரு பகுதி என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Suresh gopi speech viral


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->