'நாடு முழுதும் வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது தேர்தல் ஆணையத்தின் கடமை: அதில் தலையிட முடியாது' என்கிறது உச்ச நீதிமன்றம்..!
Supreme Court says it cannot interfere in the issue of revision of voter list across the country
நாடு முழுதும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு தீவிரப்பணி மேற்கொள்வது என்பது தேர்தல் ஆணையத்தின் தனியுரிமை என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அத்துடன், அதில் தலையிடவும் மறுத்துள்ளது. பீஹாரில் நடந்த வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு தீவிரப்பணி குறித்த வழக்க உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி சூர்ய காந்த் கூறியதாவது: வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு தீவிரப்பணி நடத்துவது என்பது தேர்தல் ஆணையத்தின் வரம்புக்குள் வருகிறது. மற்ற மாநிலங்களில் நடக்கும் போது அதில் நீதிமன்றம் தலையிடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது தேர்தல் ஆணையத்தின் கடமை எனவும், அனைத்தையும் ஏன் நீதிமன்றம் கையில் எடுக்க வேண்டும் என நினைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பியதோடு, தேர்தல் ஆணையத்தின் சொந்தமாக விதிமுறைகள் உள்ளன. அதன்படி செய்யட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எங்கள் பெயர் நீக்கப்பட்டது குறித்து முறையீடு செய்ய விரும்புகிறோம். ஆனால், உத்தரவு கிடைக்கவில்லை எனக்கூறும் 100 பேரின் பட்டியலை மனுதாரர்கள் வழங்க முடியுமா.? என்றுகேட்டுள்ளதோடு, இதனை யாருக்காக செய்கிறோம். மக்கள் ஏன் முன்வரவில்லை என்பதே தற்போதைய கேள்வி எனக் கூறியுள்ளார். . அத்துடன், இந்த வழக்கு விசாரணையை நாளை மறுநாள், (அக்டோபர் 09-ஆம் தேதி) ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Supreme Court says it cannot interfere in the issue of revision of voter list across the country