தண்டனை கொடுக்க மரண வாக்குமூலம் மட்டும் போதாது - விடுதலை செய்த உச்சநீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


மரண வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு தண்டனை வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பெற்ற மகன், உடன் பிறந்த இரு சகோதர்களை எரித்துக் கொலை செய்த வழக்கில், உயிரிழக்கும் முன் அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றவாளியாக கருதி தண்டனை வழங்க முடியாது என்று, உச்ச நீதிமன்றம் குற்றவாளியை விடுதலை செய்துள்ளது.

இந்த வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய், ஜே.பி. பர்திவாலா மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இதுகுறித்து விரிவாக அளித்துள்ள உத்தரவில், "மரண வாக்குமூலத்தில் சொல்லப்படும் தகவல்களை மிக கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த மாற்றுக்கருத்ம் உள்ளை.

காரணம் இறக்கும் தருவாயில் உள்ளவர்களுக்கு வேறு எந்த உள்நோக்கமும் இருக்காது என்பதால், உண்மையே பேசுவார் என்றும் கருதப்படுகிறது. 

ஆனால், மரண வாக்குமூலத்தை இந்த நீதிமன்றம் அப்படியே கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளாது. அதை மட்டுமே அடிப்படையாக கொண்டு ஒருவருக்கு தண்டனையை வழங்குவது நியாயமாக இருக்காது.

மரண வாக்குமூலமும் ஒரு ஆதாரமாகவே கருதப்படும். அதனுடன் உரிய ஆதாரங்களும் காட்டப்பட வேண்டும். 

இந்த வழக்கை பொறுத்தவரை, மரண வாக்குமூலத்தில் சொல்லப்பட்ட தகவலும், சம்பவம் நடந்த சூழலிலும் சில சந்தேகங்கள் இருப்பதால் தான் இந்த கருத்து இங்கு முன்வைக்கப்படுகிறது" என்றும் நீதிபதி தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme Court Judgement 25082023


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->