கர்நாடகா : வகுப்பறையில் முஸ்லிம் மாணவனை தீவிரவாதி என்று அழைத்த பேராசிரியர் - சர்ச்சை வீடியோ வைரல்! - Seithipunal
Seithipunal



கர்நாடக மாநிலம், மணிப்பால்  பல்கலைக் கழக வகுப்பு ஒன்றில், முஸ்லிம் மாணவனை தீவிரவாதி என்று அழைத்த பேராசிரியரின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.

மணிப்பால் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் ஒரு வகுப்பறையில் முஸ்லிம் மாணவரை பார்த்து தீவிரவாதி என பேராசிரியர் குறிப்பிட்டு அழைத்து திட்டியதாக அந்த வீடியோவில் மாணவன் பேசுவது பதிவாகியுள்ளது.

மேலும், மாணவர்கள் முன்பு தன்னுடைய மதம் சார்ந்து தவறான கண்ணோட்டத்துடன் இழிவுபடுத்தியதால் தன் மனம் புண்பட்டுவிட்டதாக அந்த மாணவன் பேசுவது பதிவாகியுள்ளது.

இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், பேராசிரியருக்கு எதிராக பலரும் கண்டன குரலை எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், சர்ச்சைக்குள்ள இந்த வீடியோவால் அந்த பேராசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

STUDENT VIDEO VIRAL 2022


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->