சீறிப்பாயும் சிறுத்தையே இந்த நிலைனா..? தனியாக செல்லும் அப்பாவி மக்களின் நிலை..? தெருநாயின் வெறிச்செயல்: நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ...!
Stray dog drags leopard with its mouth in a video
டெல்லி தலைநகரில் தெருநாய்கள் பொதுமக்களை அடிக்கடி தாக்கி வந்ததோடு, வெறிநாய் கடித்து சிலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனால் நாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என டெல்லி உச்ச நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டு இருந்தது. இதனை தொடர்ந்து, நாடு முழுவது உள்ள விலங்கு நல ஆர்வலர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
தற்போது, தெருநாய்களுக்கு உடனடியாக கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்த நீண்டதும் என நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. நாட்டில் 06 கோடி தெருநாய்கள் உள்ளததாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
பராமரிப்பு இன்றி தெருக்களில் சுற்றித் திரியும் தெருநாய்கள் தனியாக செல்லுபவர்களை கடித்து குதறும் காட்சிகள் அடிக்கடி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிலர் சம்பவ இடத்திலேயே பலியான சோகமும் நிகழ்ந்துள்ளது. பலருக்கு நாய்கடியால் ரேபிஸ் தொற்று ஏற்பட்டு உயிருக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், சிறுத்தைகள், புலிகள் போன்ற வீரமிக்க மிருகங்கள் வீட்டில் உள்ள நாய்கள், பூனைகள், ஆடு மாடு கோழி என்பவற்றை அடித்து தூக்கிச் செல்லும் காட்சிகளையும் நாம் அடிக்கடி செய்தியும் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகும் வீடியோக்களை பார்த்தும் தெரிந்து கொள்கிறோம்.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு சிறுத்தையையே தெருநாய் ஒன்று கடித்து சுமார் 300 மீ. தூரத்திற்கு இழுத்துச் சென்ற பதைபதைக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாஷிக் மாவட்டத்தில் உள்ள நிபாத் தாலுக்காவிற்கு உட்பட்ட கங்குர்டே வஸ்தி அருகே, சில நாய்கள் உலாவிக்கொண்டிருந்தன. அப்போது திடீரென அந்த பகுதியில் புகுந்த சிறுத்தை, நாய்களை துரத்தியது.அப்போது, இதில் ஒரு நாய், சிறுத்தையின் வாய் பகுதியை கவ்விக்கொண்டு,இழுத்து சென்றதால், சிறுத்தையால் ஒன்னும் செய்ய முடியவில்லை.
அதாவது அந்த தெரு நாய், தன்னை மிஞ்சிய எடை கொண்ட சிறுத்தையை 300 மீ தூரத்திற்கு இழுத்துச் சென்றதில், சிறுத்தைக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சிறுத்தையை மீட்டு அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதிக எடை மற்றும் சீறிப்பாயும் சிறுத்தையையே கடித்து ஒரு தெருநாய் குதறுகிறது என்றால், அப்பாவி மக்கள் தனியாக கிடைத்தால் என்னவாகும்..?என்பது இந்த வீடியோவை பார்க்கம்போது நெஞ்சம் பதைபதைக்கிறது.
English Summary
Stray dog drags leopard with its mouth in a video