இந்தியாவுடன் இலங்கை ஒப்பந்தம்: இது தான் காரணம்! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் அத்தியாவசியமான மருந்து பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. 

மருத்துவமனையில் இருந்த காலாவதியான மருந்துகள் மற்றும் மருந்து தட்டுப்பாடு காரணமாக அதிக அளவில் மரணங்கள் ஏற்பட்டது. 

இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அவசர கால கொள்முதலுக்கு இலங்கை உத்தரவிட்டது. இது மிகப்பெரிய அளவில் ஊழல்களுக்கு வழி வகுத்தது. 

மேலும் தரமற்ற மருந்து பொருட்களை தர சோதனை இல்லாமல் நாட்டுக்குள் அனுமதித்தது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. 

இது குறித்து இலங்கை சுகாதாரத்துறை மந்திரி கெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருப்பதாவது, இலங்கை அரசாங்கம் ஊழலை தடுப்பதற்காக அவசரகால மருந்து கொள்முதலை நிறுத்துகிறது. 

இந்நிலையில் வங்கதேசம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் இலங்கை ஒப்பந்தம் மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sri Lanka Agreement with India


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->