மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம்; பெற்ற தாய் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூர மகன்..!
Son pours petrol on mother and sets her on fire because she didnt give him money to drink alcohol
ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தை சேர்ந்தவர் 45 வயதான டேபாசிஷ் நாயக். மது மற்றும் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையான இவர், அடிக்கடி தனது தாயாரான 65 வயதான ஜோத்ஸ்நரனி நாயகிடம் பணம் கேட்டு வந்துள்ளார். அவரும் தனது சேமிப்பு பணத்தை அவ்வப்போது டேபாசிஷ் நாயக்கிடம் கொடுத்து வந்துள்ளார்.
இந் நிலையில் இன்றும் தனது தாயிடம் மீண்டும் மது குடிப்பதற்காக டேபாசிஷ் பணம் கேட்டுள்ளார். அப்போது ஜோத்ஸ்நரனி தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டேபாசிஷ் நாயக், தனது தாயின் உடலின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.

65 வயதான ஜோத்ஸ்நரனி நாயக்கின் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்த நிலையில், வலியாலும் எரிச்சலாலும் அலறித் துடித்துள்ளார். இதைக் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். அப்போது இந்த கொடூர செயலை செய்த டேபாசிஷ் நாயக் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இதையடுத்து பலத்த தீக்காயங்களுடன் ஜோத்ஸ்நரனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தப்பியோடிய டேபாசிஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Son pours petrol on mother and sets her on fire because she didnt give him money to drink alcohol