வாக்கு எணிக்கைக்கு மத்தியில் பாஜக அலுவலகத்தை படம் பிடிக்க வந்த நல்ல பாம்பு - பாஜகவினர் அலறியடித்து ஓட்டம்.! - Seithipunal
Seithipunal


வாக்கு எணிக்கைக்கு மத்தியில் பாஜக அலுவலகத்தை படம் பிடிக்க வந்த நல்ல பாம்பு - பாஜகவினர் அலறியடித்து ஓட்டம்.!

கடந்த 10ம் தேதி கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் போட்டியிட்டன. இந்த நிலையில், இன்று இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 

இந்த வாக்கு எண்ணிக்கையில், தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் 118 தொகுதிகள் பெற்று முன்னிலையில் உள்ளது. பாஜக 73 இடங்களிலும், ஜனதா தளம் 25 தொகுதிகளும், மற்ற காட்சிகள் 8 தொகுதிகளிலும் உள்ளன. இதன் படி கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது. 

இந்த நிலையில், ஷங்கான் தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் அலுவலகத்திற்குள் திடீரென நாகப்பாம்பு புகுந்தது. இதைப்பார்த்த பாஜகவினர் அலறியடித்து அங்கிருந்து தலைதெறிக்க வெளியே ஓடினர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

அந்த தகவலின் படி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாஜக அலுவலகத்தில் இருந்த நாகப்பாம்பை சாக்குப் பைக்குள் போட்டு அடைந்துக் கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் பாஜக அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

snake entered bjp office in shangaan karnataga


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->