மேற்குவங்கத்தில் ஆச்சர்யம்: 37 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகனை கண்டுபிடிக்க உதவிய எஸ்ஐஆர்; குடும்பத்தினர் நெகிழ்ச்சி..!
SIR helps find son who went missing 37 years ago in West Bengal
37 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன ஒருவரை எஸ்ஐஆர் உதவியுடன் அவரது குடும்பத்தினர் கண்டுபிடித்த நிகழ்வு மேற்கு வங்கத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் தேர்தல் கமிஷன் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் எனப்படும் எஸ்ஐஆர் நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தி உள்ளன. இது குறித்து பல அரசியல் கட்சிகள் இடையே ஏராளமான கருத்து முரண்கள் உள்ளன. அரசியல் ரீதியானவை பார்வை ஒரு பக்கம். மறுபுறம் சட்டவிரோத குடியேற்றவாசிகளை இனங்காணவும் உதவுகிறது. தற்போது இந்த எஸ்ஐஆரால் 37 ஆண்டுகளுக்கு முன்னால் காணாமல் போன ஒருவரை அவரது குடும்பத்தினர் கண்டுபிடித்துள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள புருலியா என்ற கிராமத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பவரின் மகன் விவேக் சக்கரவர்த்தி என்பவர் 1988-ஆம் ஆண்டு காணாமல் போனார். அவர் எங்கே உள்ளார் என்று அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியுள்ளனர்.

இறுதியில் எவ்வளவோ முயன்றும் விவேக் சக்கரவர்த்தி உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பது கூட அக்குடும்பத்தினருக்கு தெரியவில்லை. ஒரு கட்டத்தில் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிய, மேற்கொண்டு தமது தேடலை சக்கவரத்தி கைவிட்டுள்ளார்.
இந் நிலையில், கோல்கட்டாவில் விவேக் சக்கரவர்த்தியின் சகோதரர் பிரதீப் சக்கரவர்த்தி என்பவர் ஓட்டுச்சாவடி நிலை அலுவலராக உள்ளார். இதனால், எஸ்ஐஆர் விண்ணப்ப படிவத்தில் இவரின் செல்போன் எண் அச்சிடப்பட்டுள்ளது.
இந்த எண்ணுக்கு விவேக் சக்கரவர்த்தியின் மகன் போன் செய்து, தமது எஸ்ஐஆர் படிவத்தை பூர்த்தி செய்ய உதவுமாறு கேட்டுள்ளார். விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய தேவையான அனைத்து தகவல்களையும் ஒவ்வொன்றாக கேட்டு பெற ஆரம்பித்துள்ளார். அப்போது அவர், 37 ஆண்டுகளுக்கு முன்னர் தமது தந்தை வீட்டை விட்டும், சொந்த கிராமமான புருலியாவை விட்டும் வெளியேறியதை கூறியுள்ளார்.

அவர் சொன்ன தகவல்கள் அனைத்தும் தமது குடும்ப உறுப்பினர்களின் தகவல்களுடன் ஒத்து போகவே பிரதீப் சக்கரவர்த்திக்கு உடனடியாக, விவேக் சக்கரவர்த்தியிடன் போனை தருமாறு கூறியுள்ளார். பின்னர் இருவரும் சில நிமிடங்கள் பேசுயநிலையில், அதன் பிறகே காணாமல் போன விவேக் சக்கரவர்த்தி தான் மறுமுனையில் பேசுகிறார் என்பதை பிரதீப் சக்கரவர்த்தி கண்டுபிடித்துள்ளார்.
இந்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்து விவேக் சக்கரவர்த்தி கூறியதாவது; ''அந்த உணர்வுகளை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. 37 ஆண்டுகள் கழித்து நான் என் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரிடம் பேசி இருக்கிறேன். என் மனது முழுதும் மகிழ்ச்சியால் நிரம்பியுள்ளது. தேர்தல் கமிஷனுக்கு என் நன்றிகள். எஸ்ஐஆர் இல்லை என்றால் இது நடந்திருக்கவே முடியாது.'' என்று விவேக் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.
English Summary
SIR helps find son who went missing 37 years ago in West Bengal