அன்பு தகர்ந்த இடத்தில் அதிர்ச்சி! கோடாரியால் கணவன் கைவரிசையில் உயிரிழந்த மாரம்மா...! நடந்தது என்ன..? - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தின் சுராபுரா காவல் எல்லைக்குள் உள்ள டோனிகரா கிராமத்தைச் சேர்ந்த மாரம்மா (35), சில ஆண்டுகளுக்கு முன் கக்கேரா பகுதியைச் சேர்ந்த சங்கப்பா (40) என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், தம்பதியருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஒரு வருடமாக மாரம்மா தனது தாய் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் தனது மனைவியை பார்க்க சங்கப்பா சுராபுராவிற்கு வந்தார். பின்னர், மனைவியை உல்லாசமாக வெளியில் அழைத்துச் செல்ல விரும்பிய அவர், அதற்கு மாரம்மா மறுத்ததும் இருவருக்குள் கடுமையான வாக்குவாதம் வெடித்தது.

விதித்த தொடர்ந்து ஆத்திரத்தில் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் போன சங்கப்பா, வீட்டில் இருந்த கோடாரியை பிடித்து மாரம்மாவை சரமாரியாக வெட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், காயங்களால் ரத்த வெள்ளத்தில் சரிந்த மாரம்மா, அங்கிருந்தபடியே உயிரிழந்தார்.பிறகு, மனைவி உயிரிழந்ததை உணர்ந்த சங்கப்பா அதிர்ச்சியடைந்து, நேராக சுராபுரா காவல்  நிலையத்துக்குச் சென்று தானே சரணடைந்தார். இந்த தகவல் கிடைத்ததும் காவலர்கள் விரைந்து வந்து, மாரம்மாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும், சங்கப்பாவை கைது செய்த காவலர்கள் , கொலை குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துயரச்சம்பவம் சுராபுரா பகுதியை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shock place where love shattered woman died hands her husband axe What happened


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->