ஐடி நிறுவனத்தில் அதிர்ச்சி...! பெண் ஊழியர்கள் மீது பாலியல், மத அழுத்த குற்றச்சாட்டு...!
Shock IT company Allegations religious pressure against female employees
மராட்டிய மாநிலம் நாசிக்கில் செயல்பட்டு வரும் பிரபல ஐடி நிறுவனம் டிசிஎஸ் அலுவலகத்தில் நடந்ததாக வெளிச்சத்துக்கு வந்த சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர்கள் மீது நீண்டகாலமாக பாலியல் தொந்தரவு, மத ரீதியான அழுத்தம் மற்றும் வன்முறை நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விவகாரம் வெளிப்பட்டதையடுத்து, நாசிக் காவலர்கள் சிறப்பு குழுவை அமைத்து மறைமுக விசாரணையில் ஈடுபட்டனர். தூய்மை பணியாளர்கள் மற்றும் புதிய ஊழியர்கள் போன்று நுழைந்த அவர்கள் மேற்கொண்ட விசாரணையில், நிறுவனத்தின் சில உயர் அதிகாரிகள் பெண் ஊழியர்களை குறிவைத்து பாலியல் தொல்லை, மத மாற்ற அழுத்தம், அவதூறு பேச்சுகள் போன்ற செயல்களில் ஈடுபட்டது தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், டெனிஷ் ஷேக் என்ற அதிகாரி ஒருவரால் இளம் பெண் ஊழியர் மீது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, டீம் லீடர்கள் மற்றும் மனிதவள மேலாளர் உட்பட மொத்தம் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஆசிப் அன்சாரி, ஷாகிப் ஷேக், ஷாரூக் குரேஷி, ராசா மிமொன், தப்ஹி அட்டர், டெனிஷ் ஷேக், நிடா கான் ஆகியோர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட 7 பேரையும் டிசிஎஸ் நிறுவனம் பணியிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளது. மேலும், இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Shock IT company Allegations religious pressure against female employees